Saturday, 31 August 2013

பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு?


 நீங்களும் நானும் திறந்த வெளியில் ஏதோ ஓரிடத்தில் நிற்கிறோம்.அங்கிருந்து வடக்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் பனிக்கட்டியால் மூடப்பட்ட வட துருவத்துக்குப் போய்ச் சேருவோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் உறைந்த பனிக்கட்டிப் பிரதேசமான தென் துருவத்துக்குப் போய்ச் சேருவோம்.

மாறாக நாம் நிற்கிற இடத்திலிருந்து பெருச்சாளி பள்ளம் தோண்டுவதைப் போல பள்ளம் தோண்டியபடி பூமியின் மையத்தை நோக்கி நேர் கீழாகப் போவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.  

சில கிலோ மீட்டர் ஆழத்துக்கு சென்றாலே வெப்பம் தகிக்கும். அந்த வெப்பத்தில் நாம் வெந்து போய் விடுவோம்.

 உலகில் மிக ஆழமான தங்கச் சுரங்கங்களில் பாறையை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி விடும்.தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள டாவ் டோனா தங்கச் சுரங்கம் தான் உலகின் மிக ஆழமான சுரங்கமாகும்.அதன் ஆழம் 3.9 கிலோ மீட்டர்

பூமியானது பல அடுக்குகளால் ஆனது.Core என்பது பூமியின் மையத்தைக் குறிக்கிறது.
அச்சுரங்கத்தில் பாறைகளின் வெப்பம் 60 டிகிரி செல்சியஸ். சுரங்கத்தில் அந்த இடத்தில் வெப்ப நிலை 55 டிகிரி செல்சியஸ். அவ்வித வெப்ப நிலையில் தொழிலாளர்களால் பணியாற்ற இயலாது எனபதால் மேலிருந்து குழாய்கள் மூலம் தொடர்ந்து உடைந்த  ஐஸ் கட்டிகளை அனுப்பி வெப்பதைக் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்கிறார்கள்.சுமார்  நான்கு கிலோ மீட்டர் ஆழத்திலேயே இந்த கதி.

பூமியின் மையம் என்பது தரை மட்டத்திலிருந்து 6,371 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளது. ஆகவே பூமியின் மையத்தில் வெப்பம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள ஆராய்ச்சிக்கூடம் ESRF
பூமியின் மையத்தில் வெப்பம் 5,000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம் என்று இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் சில பரிசோத்னைகள் மூலம் இபோது புதிதாகக் கணக்கிட்டதில் இது 6,000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகிட்டத்தட்ட சூரியனின் மேற்புறத்தில் உள்ள வெப்பத்துக்குச் சமமானது.

பூமியின் மையம் இரும்பால் ஆனது. ஆனால் அந்த வெப்ப நிலையிலும் அது குழம்பாக இல்லாமல் படிக வடிவில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

பூமியின் மையம் இந்த அளவுக்கு வெப்பமாக இருப்பதற்குக் குறைந்தது மூன்று காரணங்கள் உண்டு.பூமி தோன்றிய போது மையத்தில் இருந்த வெப்பம் அவ்வளவாகக் குறையவில்லை. இரண்டாவதாக பூமியின் மையம் கடும் அழுத்தத்தில் இருக்கிறது. எந்த அளவுக்கு அழுத்தம் உள்ளதோ அந்த அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும். பூமியின் மையத்தில் உள்ள அழுத்தமானது தரை மட்டத்தில் உள்ளதைப் போல பத்து லட்சம் மடங்காக உள்ளது.

பூமியில் மேலும் மேலும் ஆழத்தில் யுரேனியம், பொட்டாசியம் தோரியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் அதிகமாக உள்ளன.இந்த கதிரியக்க உலோகங்கள் இயற்கையாக சிதைவுக்கு உள்ளாகின்றன. அப்போது வெப்பம் தோன்றும். பூமியின் மையம் பயங்க்ர வெப்பத்தில் உள்ளதற்கு இதுவும் காரணம்.

 பூகம்பங்க்ள் ஏற்படும் போது தோன்றும் அலைகள் பூமியின் பல்வேறு அடுக்குகளின் தடிமன், அடர்த்தி ஆகியவை பற்றித் தெரிவிக்கின்றன.ஆனால் பூமியின் மையத்தில் உள்ள வெப்பம் பற்றி அவை தெரிவிப்பதில்லை.

ஆகவே  பூமியின் மையத்தில் உள்ள வெப்பம் எந்த  அளவில் இருக்கலாம் என்று அறிய நவீன ஆராய்ச்சிகூடங்களில் சோதனைகளை நடத்தலாம் இதற்கான சோதனை பிரான்ஸ் நாட்டில் கிரெனோபிள் என்னுமிடத்தில் உள்ள European Synchrotron Radiation Facility (ESRF) என்னும் ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்பட்டது. இது பல ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து நிறுவியதாகும்.இங்கு மிகுந்த ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக்கும் வசதிகள் உள்ளன்
மிகுந்த அழுத்தத்தை உண்டாக்கும் சிறிய கருவி
.பூமியின் மையத்தில் இருக்கின்ற அளவுக்கு செயற்கையாக அழுத்தத்தை  உண்டாக்குவதற்கென விசேஷக் கருவி உள்ளது.உள்ளங்கையில் வைத்துக் கொள்ள முடியும் என்ற அளவுக்கு அது சிறியது.Diamond Anvil Cell  என்பது அதன் பெயர்.அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும்.

இக்கருவியில் எதிர் எதிராக வைர ஊசிகள் உண்டு. இந்த இரு வைர  ஊசிகளின் நுனிகளுக்கு  நடுவே உள்ள நுண்ணிய இடைவெளியில் நுண்ணிய உலோகப் பொருளை வைக்கலாம். பூமியின் மையத்தில் இரும்பு உள்ளது என்பதால் மிக நுண்ணிய இரும்புத் துணுக்கை வைத்தார்கள். பின்னர் அந்த இரும்புத் துணுக்கு மீது பயங்கரமான அழுத்தத்தைப் பிரயோகித்தனர்.
பரிசோதனைகள் நடந்த ஆராய்ச்சிக்கூடப் பகுதி
அதே சமயத்தில் லேசர் கருவி மூலம் இரும்புத் துணுக்கின் வெபபத்தை அதிகரித்துக் கொண்டே போயினர். அப்படியான சோதனையின் போது கடும் எக்ஸ் கதிர்களை கொண்டு இரும்புத் துணுக்கைத் தாக்கினர்.இதன் பலனாக இரும்பு அணுக்கள் பல விளைவுகளைக் காட்டின. இபபரிசோதனைகளின் போது வெவ்வேறு கட்டங்களில் அழுத்தம் அதிகரிக்கப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது. அதே போல வெப்ப அளவும் அவ்வப்போது மாற்றப்பட்டது.

இப்படியான நுணுக்கமான சோதனைகள் மூலமே பூமியின் மையத்தில் வெப்பம் எந்த அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்டது.

பூமியின் உட்புறம் பற்றி ஆராய்கிற  நிபுணர்கள், பூமியின் காந்தப் புலம் பற்றி ஆராயும் நிபுணர்கள், பூகம்பங்களை ஆராயும் நிபுணர்கள் என பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு பூமியின் மையத்தில் இருக்கக்கூடிய வெப்பம்  பற்றிய தகவல் தேவைப்படுகிறது.அந்த நோக்கில் தான் இந்த ஆராய்ச்சி நடத்த்டப்பட்டது.

பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?

 

ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார். மேலும் மேலும் சாய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் எடையைத் தாங்க முடியாமல் மீசைக்காரர் உடலை உலுக்கியபடி விழித்துக் கொள்கிறார். வெள்ளைச் சட்டைக்காரகும் விழித்துக் கொண்டு சுதாரித்துக் கொள்கிறார்.

பூகம்பம் கிட்டத்தட்ட இப்படித் தான் ஏற்படுகிறது. ஒரு சில்லு அடுத்த சில்லை மேலும் மேலும் நெருக்குகிறது. அடுத்த சில்லு ஒரு கட்டம் வரை இதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது. நெருக்குதல் ஒரு கட்டத்தை எட்டும் போது சில்லுக்கு அடியில் உள்ள பாறைப் பாளம் பெரிய உலுக்கலுடன் நகருகிறது. அதுவே பூகம்பம்.
இமயமலை அடிவாரத்தில்
பூகம்பம் நிகழக்கூடிய இடங்கள்
இந்திய துணைக் கண்ட சில்லு ஆண்டுக்கு 5 செண்டி மீட்டர் விகிதம் வட கிழக்கு திசையில் நகருகிறது. யுரேசிய சில்லு மிக மெதுவாக வடக்கு நோக்கி நகருக்கிறது. எனவே இந்தியச் சில்லு யுரேசிய சில்லுவை மேலும் மேலும் நெருக்குகிறது. இதன் விளைவாகவே பாகிஸ்தானின் வட பகுதியில் தொடங்கி அஸ்ஸாம் வரையில் இமயமலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் அடிக்கடி பூகம்பம் நிகழ்கிறது. துருக்கியிலும் இவ்விதம் நிகழ்கிறது. ஆகவே துருக்கி நாட்டில் பூகம்பம் அதிகம்.

சில்லுகள் உரசும் இடங்களிலும் பூகம்பம் நிச்சயம். அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் இரண்டு சில்லுகள் எதிரும் புதிருமாக உரசிச் செல்கின்றன. ஆகவே அங்கு பூகம்பங்கள் நிக்ழ்கின்றன.

ஒரு சில்லு மற்றொரு சில்லுக்கு அடியில் புதையும் இடங்களிலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. இந்தோனேசியாவுக்கு அருகே கடலுக்கு அடியிலும், ஜப்பானுக்கு கிழக்கே கடலுக்கு அடியிலும் இவ்விதம் சில்லுகள் புதைகின்றன. நியூசிலந்திலும் இதே காரணத்தால் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

நீங்கள் மாவு மில்லில் அரைபட்டு வந்து டின்னில் வந்து விழும் மாவைத் தொட்டால் மாவு மிகவும் சூடாக இருக்கும். சில்லுகளின் விளிம்புகள் புதையுண்டு போகும் போது பிரும்மாண்டமான பாறைப் பாளங்கள் இதே போல அரைபட்டு பூமிக்குள் செல்கின்றன. பாறைப் பாளங்கள் இப்படி அரைபடும் போது அவை பயங்கமாகச் சூடேறி நெருப்புக் குழம்பாக மாறுகின்றன. இந்த நெருப்புக் குழம்புதான் எரிமலை வாய் வழியே வெளியே வருகிறது.
இந்தோனேசியத் தீவுகளில் உள்ள எரிமலைகள்
பூமியில் மிக ஆழத்தில் நெருப்புக் குழம்பு உள்ளது. ஆனால் எரிமலைகள் வழியே வெளி வருவது பூமியில் ஆழத்தில் உள்ள குழம்பு அல்ல. சில்லுகள் அரைபடும் போது தோன்றும் நெருப்புக் குழம்புதான் எரிமலைகள் வழியே வெளிப்படுகிறது. ஆகவே சில்லுகள் புதையுண்டு போகும் இடங்களில் எரிமலைகள் உண்டு.

சில்லுப் பெயர்ச்சி விஷயத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தோனேசியா என்று சொல்லலாம். இந்த நாட்டில் பூகம்பம், எரிமலை, சுனாமி ஆகிய மூன்றுமே உண்டு. இந்தோனேசியாவின் தென் பகுதியில்(இந்திய) ஆஸ்திரேலிய சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் பசிபிக் சில்லு இதே போல யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. 17,600 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் 150 எரிமலைகள் உள்ளதில் வியப்பில்லை.ஜப்பானுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியிலும் இதே நிலைமை தான். ஆகவே ஜப்பானிலும் பூகம்பம், எரிமலை, சுனாமி ஆகிய மூன்றும் உள்ளன.

ஜப்பானில் மட்டுமன்றி அலாஸ்கா, வட அமெரிக்காவின் மேற்குக் கரை, தென் அமெரிக்காவின் மேற்குக் கரை, நியூசிலந்து ஆகியவற்றில் எரிமலைகள் உள்ளன. வேறு விதமாகச் சொல்வதானால் பசிபிக் கடலைச் சுற்றி உள்ள நிலப் பகுதிகளில் எரிமலைகள் உள்ளன. இதை நெருப்பு வளையம் (Ring of Fire)  என்று சொல்வதுண்டு (கீழே படம் காண்க).
பசிபிக் கடலைச் சுற்றி எரிமலைகள்
அமைந்துள்ளதைக் காட்டும் வரைபடம்
நிலப் பகுதியில் மட்டுமன்றி கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் உண்டு. இந்த கடலடி பூகம்பங்கள் தான் சுனாமியைத் தோற்றுவிக்கின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்டதே.
2004 ஆம் ஆண்டில் தமிழகத்தைத் தாக்கிய
சுனாமியின் மையம்.
பூகம்பத்திலிருந்து மனிதன் ஓடி ஒளிய வாய்ப்பில்லை. ஆனால் கடும் பூகம்பத்தையும் தாங்குகின்ற கட்டடங்களைக் கட்டுவதற்கான தொழில் நுட்பத்தை மனிதன் உருவாகியிருக்கிறான. ஆகவே உயிர்ச் சேதம் பொருட்சேதத்தைப் பெரிதும் குறைத்துக் கொள்ள இயலும்.
பூகம்பத்தை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய இதுவரை வழி கண்டுபிடிக்கப்படவில்லை. குறிபிட்ட பிராந்தியத்தில் தோராயமாக சில ஆண்டுகளில் பூகம்பம் ஏற்படலாம் என்று இப்போது அறிய முடிகிறது. எதிர்பார்க்கப்படுகின்ற அந்த பூகம்பம் சில ஆண்டுகளில் நிகழலாம் அல்லது 40 அல்லது 50 ஆண்டுகள் கழித்தும் ஏற்படலாம். இப்போதுள்ள தொழில்நுட்பத்தைக்கொண்டு என்றைக்கு, எப்போது, எந்த அளவுக்குக் கடுமையான பூகம்பம் தோன்றும் என்று அறிவதற்கு வாய்ப்பே இல்லை.

எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்பதும் தெரியாது. ஆனால் நோயாளியின் மார்பில் டாக்டர் ஸ்தெதாஸ்கோப் வைத்துப் பார்ப்பது போல எரிமலைச் சரிவுகளில் உணர் கருவிகளைப் பதித்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். எரிமலைகள் அனைத்தும் தொடர்ந்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பதில்லை.(இத்தாலியில் உள்ள ஸ்டிராம்போலி எரிமலை இதற்கு விதிவிலக்கு). எரிமலைகள் நீண்ட காலம் ஓய்ந்திருக்கும். பின்னர் உறுமல்களுடன் நெருப்பைக் கக்க ஆரம்பிக்கலாம். அப்படி நெருப்பைக் கக்கினாலும் அந்த நெருப்புக் குழம்பு மனிதன் நடக்கின்ற வேகத்தில் தான் வழிந்தோடும். தப்பி ஓட அவகாசம் உண்டு. மிக அபூர்வமாக எரிமலைகள் மிக பயங்கரமாக வெடித்து பெரும் உயிர்ச் சேதத்தை உண்டாக்கும்.

சுனாமிக்களைப் பொருத்தவரையில் ஒரு விசித்திர நிலைமை உள்ளது. சுனாமி தாக்கலாம் என்று கண்டறிந்து கூற முடியும். கடலில் இதற்கான கருவிகளை நிறுவுகின்றனர். சுனாமிக்குக் காரணமான கடலடி பூகம்பம் ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளவர்கள் எளிதில் உயிர் தப்ப இயலும். அதாவது இந்தோனேசியா அருகில கடலடி பூகம்பம் ஏற்பட்டால் சுனாமி அலைகள் தமிழகத்தின் கரைக்கு வந்து சேர சுமார் 2 மணி நேரம் ஆகும். ஆகவே தக்க நேரத்தில் எச்சரிக்கை வந்தால் தமிழகத்தின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல போதுமான அவகாசம் கிடைக்கும். 2004 ஆம் ஆண்டில் இவ்வித எச்சரிக்கை ஏற்பாடு இல்லாமல் போய் விட்டது.

ஆனால் கடலடி பூகம்பம் நிகழும் இடத்துக்கு மிக அருகில் வாழ்பவர்களைப் பொருத்த வரையில் எச்சரிக்கை விடப்பட்ட சில நிமிஷங்களில் சுனாமி அலைகள் வந்து தாக்கும் நிலை உள்ளது. மக்கள் தப்பிச் செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்காமல் போய் விடுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது இந்தோனேசியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

சில்லுகள் சந்திக்கும் இடங்களில் பூகம்பம் ஏற்படுவதாகக் கூறினோம். ஆனால் ஒரு சில்லின் நடுவே பூகம்பங்கள் நிகழத்தான் செய்கின்றன. 2001 ஆம் ஆண்டில் குஜராத்தில் பூஜ் என்னுமிடத்தில் ஏற்பட்ட பூகம்பம் இதற்கு உதாரணம். இந்த இடம் சில்லுகள் சந்திக்கும் இடத்திலிருந்து தொலைவில் உள்ளது. இவ்வித பூகம்பங்கள் Mid-Plate Earthquakes  எனப்படுகின்றன. நிபுணர்கள் இதற்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். எனினும் இதுவரை பூகம்பத்திற்கான திட்டவட்டமான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

சில்லுகள் புதையுண்டு போகிற இடங்களில் எரிமலைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டோம். ஆனால் சில்லுகள் சந்திக்காத, புதையுண்டு போகின்ற நிலைமை இல்லாத, இடங்களிலும் அபூர்வமாக எரிமலைகள் உண்டு. பசிபிக் சில்லின் நட்ட நடுவே அமைந்திருக்கும் ஹவாய் தீவுகளில் இப்படியான எரிமலைகள் உள்ளன.
ஹவாய் தீவு எரிமலை 
இவை Intra-plate volcanoes அல்லது Hot Spots  என வருணிக்கப்படுகின்றன. பூமியில் மிக ஆழத்திலிருந்து நெருப்புக் குழம்பு செங்குத்தாக மேலே வருவதால் இவை உண்டாவதாகக் கூறப்படுகிறது. இவ்வித எரிமலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள Yellowstone எரிமலையும் இந்த வகையைச் சேர்ந்ததே.

சில்லுப் பெயர்ச்சியின் விளைவாக ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள், சுனாமிக்கள் ஆகியவை பூமியில் மனிதனை அடியோடு அழித்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை.அப்படி நடப்பதாக இருந்தால் மனித இனம் என்றோ அழிந்து போயிருக்க வேண்டும். கால்ம காலமாக பூகம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. எரிமலைகளில் ஏதோ ஒன்று தான் எப்போதாவது பெரிய அளவில் பொங்கி நாசத்தை உண்டாக்குகிறது. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற சுனாமிக்கள் மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன

ஆனால் ஒரு பெரிய எரிமலை வெடிப்பதால் ஏற்படும் துணை விளைவுகள் மனித குலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.அடுத்த பதிவில் அதைக் கவனிப்போம்.

Thursday, 29 August 2013

*முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*

*முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*

 
 
வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.
 
 
அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.
 
எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.
 
சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.
ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.
 
வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

Monday, 26 August 2013

முடி வளர எளிய மருத்துவம்..!!


முடி வளர எளிய மருத்துவம்..!! 
 
 
முடி உதிர்வதை தடுக்க: வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடிகொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
 

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

உங்களுக்கு தெரியுமா..? 

 

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..

புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். 
( கொசுக்களிலுமா?)

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 – 6 வயதில் தான் வளர்கிறது.

எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?


பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி? 
 
 
1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
 
 2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
 

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு! 

 

leave 
 
 
குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர்.

கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

பச்சைத்தண்டு :

கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.

செங்கீரைத்தண்டு :

பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.

பெண்கள் நோய் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு, செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.

வெண்கீரைத் தண்டு :

வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும். கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடுகட்ட இந்த கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.
 

அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வாழைப்பழம்!


bana 
 
 
நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது.

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு மட்டுமல்லாமல் நோய்கள் வராமல் தடுக்க நோய்எதிர்ப்பு நாசினியும் கூட செயல்படுகிறது.

எப்போதும் மந்தமாக இருக்கிறோம் என கருதுபவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த உணவாகும்.. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகரிக்கிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால் நீர் சத்துகளை சரியாக வைத்துக்கொள்கிறது. இம்மூன்றும் சேர்வவதால் உடல் மந்தம் நீங்கிவிடும்.

வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு தொந்தரவு நீங்கி குணம் பெறலாம். மேலும் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை மூலம் குடற்புண்ணை அழித்து குடற்புண் வராமல் பாதுகாக்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும். மூன்று நேர உணவு இடைவேளைக்கு பின்னர் வாழைப்பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு அதிகமாகி காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
 

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……


pre 
 
 
* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

* மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.

* மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.

* அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம்.

* உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.

* சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.

* எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும்.
 

ஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்!



               ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார்.

அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக்கட்டுரை அலசுகிறது.

எது முக்கியம்

ஒருவர், முதல் தடவை தனது ரெஸ்யூமை தயார் செய்ய தொடங்கும்போது, அவர் செய்த சில முக்கிய சாதனைகள், அவரின் சிறப்பான திறமைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்து குறிப்பிட மறந்துவிடுவார். மாறாக, வாங்கிய பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பிற்கான சான்றிதழ்களின் விபரங்கள், படித்து முடித்த வருடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய விஷயங்களை மட்டுமே பிரதானமாக குறிப்பிடுவார். இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.

மாறாக, ரெஸ்யூம் எழுதுபவர்கள், இரைச்சலும், தொந்தரவும் இல்லாத ஒரு தனியிடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்க போகிறோமோ, அதுதொடர்பாக செய்த சில முக்கிய சாதனைகள், பெற்ற சிறப்பு பயிற்சிகள், தனக்கு இருக்கும் தனித் திறன்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்பிட வேண்டும்.

 உங்களின் ஆலோசனைகள்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். இணையதளத்தில் விபரங்களைத் தேடினால், குறிப்பிட்ட அளவு தகவல்களே கிடைக்கும். எனவே, அந்த குறிப்பிட்ட நிறுவத்தில் பணிபுரியும் யாரேனும் சில ஊழியர்களை சந்தித்துப் பேசி, தேவையான விபரங்களை தெரிந்துகொண்டு, அங்கே என்னவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் தெரிய முயற்சிக்க வேண்டும்.

உங்களின் விண்ணப்பத்தில், பிரச்சினை என்னவென்று குறிப்பிடாமல், அதேசமயம், அதற்கான தீர்வுகளை உங்களின் ஆலோசனை வடிவில் எழுதியனுப்ப வேண்டும். உயர் நிர்வாக கமிட்டியில் இருப்பவர்கள், இதுபோன்ற ஆலோசனைகளால் கவரப்படுவார்கள். எனவே, உங்களுக்கான நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதம் இதன்மூலம் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

படிப்பதற்கு எளிதாக...

உங்களின் ரெஸ்யூம் தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் அதே நேரத்தில், படிப்பவருக்கு எளிதாக இருப்பதும், மிக முக்கியமான அம்சம்.
 
ரெஸ்யூம் எத்தனை பக்கம்

ரெஸ்யூம் தயாரிப்பை பொறுத்தவரை, சில கட்டுப்பெட்டியான விதிகள் வலியுறுத்தி சொல்லப்படுகின்றன. அதாவது, ரெஸ்யூம், பொதுவாக, ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த விதி பெரும்பாலும் புதிதாக படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு பொருந்தினாலும், அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய முக்கிய விஷயங்கள் இருந்தால், 2 பக்க ரெஸ்யூம் தயார் செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 2 பக்கங்களுக்கு மிகாமல் ரெஸ்யூம் தயார் செய்யப்பட வேண்டும்.

தகவல் பரிமாற்றம்

உங்களின் ரெஸ்யூமில், உங்களின் பலவித தொடர்புகொள்ளும் விபரங்களைத் தெரிவிப்பது மிக்க நன்று. உங்களின் வீட்டு விலாசம், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண், ஈ-மெயில் முகவரி உள்ளிட்ட விஷயங்களை தெரிவிக்கவும். ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வசதியை, வேலை வழங்குநருக்கு, இவற்றின் மூலமாக நீங்கள் வழங்க வேண்டும்.

இவற்றை தவிருங்கள்

நீங்கள் ரெஸ்யூம் தயாரிக்கும்போது, I, My, Me, Mine ஆகிய தனிப்பட்ட pronoun -களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக,

I was incharge of the entire purchase function in the ---------- company என்று எழுதுவதற்கு பதில், Incharge of the entire purchase function of the ------- company என்று எழுதலாம்.

முன்அனுபவ விபரம்

உங்களின் முன்அனுபவ விபரங்களைப் பற்றி குறிப்பிடும்போது, சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உதாரணமாக, எந்த நிறுவனம், உங்களின் பணி நிலை, காலகட்ட விபரம், நிறுவனத்தின் பெயர் மற்றும் விலாசம் ஆகிய விபரங்களைத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மேலும், அவற்றின் காலவரிசையை சரியாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவன விபரத்தை முதலிலும், இதற்கு முன்னர் இருந்ததை அடுத்ததாகவும், பின்னர் மற்றதை, அடுத்தடுத்த வரிசையிலும் குறிப்பிடலாம்.

தொழில்நுட்ப சவால்

பல நிறுவனங்களில், ரெஸ்யூம்களின் ஆரம்ப ஸ்கிரீனிங் பணியை, கணினிகளே மேற்கொள்கின்றன. நீங்கள், ரெஸ்யூமை பிரின்ட் வடிவில்(hard copy) அனுப்பினால், கீழ்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளவும். அவை,
* பிரின்ட் எடுத்த அசல் ரெஸ்யூமை அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அதன் நகலை(xerox) அனுப்பக்கூடாது. Times New Roman அல்லது Courier ஆகிய டைப் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், எழுத்தின் அளவு 11 அல்லது 12 என்ற அளவில் இருக்க வேண்டும். அதேசமயம் bold facing -ஐ தவிர்க்க வேண்டும்.

* உங்கள் படிப்பு உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்கும் வகையில், அட்டவணை எதையும் பயன்படுத்த வேண்டாம்.

* ரெஸ்யூமின் மேல் பகுதியில் உங்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.

* அதேசமயம், உங்கள் ரெஸ்யூமை soft copy முறையில் வழங்கினால், குறிப்பிட்ட key word -களை ரெஸ்யூம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், விண்ணப்பிக்கப்படும்  பதவிக்காக, வேலை வழங்குநர்கள் அவற்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த key words, உங்கள் ஸ்பெஷலைசேஷன் துறையுடன் தொடர்புடையவை.

* கணினிகள் உங்கள் ரெஸ்யூமை ஸ்கிரீனிங் செய்கையில், அந்த வார்த்தைகளின் எண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட key words -களை தேடும். எனவே, அவை இல்லையெனில், உங்களின் ரெஸ்யூம் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டுவிடும்.
 
சில நொடிகள்தான்...

பொதுவாக, உங்களின் ரெஸ்யூமை படிக்க, நேர்முகத் தேர்வாளர், அதிகபட்சமாக 10 முதல் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்வார். அந்த நேரத்திற்குள், அவரை ஈர்க்கும் விதமாக, நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொருத்தமாக, உங்களிடம் இருக்கும் தகுதிகளை highlight செய்து குறிப்பிட வேண்டும்.

ஒரே மாதிரி ரெஸ்யூமை, வேறுபட்ட நிறுவனங்களில், வேறுபட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கையில் வழங்கக்கூடாது. பல விஷயங்கள் ஒரே மாதிரியே இருந்தாலும், objective statement என்பது மாறும். குறிப்பிட்ட பணிக்கு தேவையான தகுதி நிலைகள் அதற்குள்தான் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, பல மாதிரிகளில் ரெஸ்யூம்களை வடிவமைத்து, அவற்றை pen drive மூலமாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தனித்தன்மை

வேலைதேடும் பல இளைஞர்கள், Microsoft Word -ன் ரெஸ்யூம் templates மற்றும் wizards பயன்படுத்துகிறார்கள். இது தவறில்லை என்றாலும், உங்களின் சொந்த வடிவமைப்பை(design) பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில், இதன்மூலம், நீங்கள் தனித்து அடையாளம் காணப்படுவீர்கள்.

அனுபவத்தை தெரிவித்தல் முறை

உங்களின் பழைய பணி அனுபவங்களை தெரிவிக்கையில்,
I was responsible for ----------
My duties included ---------------
I was incharge of ---------

போன்ற நடைகளில் குறிப்பிடாதீர்கள். மாறாக,
My
contributions were -----------
My accomplishments were ---------
My interventions were -----------

போன்ற நடைகளில் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், வேலை வாய்ப்பு சந்தையில் உங்களுக்கான மதிப்பு உயரும்.

நேர்மறை அம்சங்கள்

உங்கள் ரெஸ்யூமில், நேர்மறை அம்சங்கள் இடம்பெறுவது முக்கியம். ஆனால், சிலருக்கு, தனது நேர்மறை விஷயமாக எதை குறிப்பிடுவது அல்லது எது இருக்கிறது என்ற சந்தேகமும், குழப்பமும் தோன்றும். அந்த நிலையில், உங்களுடன் முன்பு பணியாற்றிய நபர்களிடம், நீங்கள் கண்டுணர்ந்த குறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

அந்தக் குறைகள் உங்களிடம் இல்லையெனில், அதுவே உங்களின் நேர்மறை அம்சங்கள். எனவே, அவற்றை குறிப்பிட தயங்க வேண்டாம். உதாரணமாக,

* Being punctual
* Creative
* Caring for minute details
* Reliable
* Following systems and procedure
* Efficiency minded
* Cost conscious
* Waste control
போன்றவற்றை சொல்லலாம்.

முதல் நிலை ஆய்வு

உங்கள் ரெஸ்யூம் ஒரு நிறுவனத்தை அடைந்ததும், முதலில், மனிதவளத் துறையினரால்தான்(HR) பகுப்பாய்வு செய்யப்படும். அவர்கள், நிர்வாகப் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, உங்களின் தொழில்துறையைப் பற்றிய நுணுக்கமான விஷயங்கள் தெரிந்திருக்கும் என்பதை சொல்ல முடியாது. எனவே, முடிந்தளவு, உங்களின் Professional jargon -களை பயன்படுத்த வேண்டாம்.

அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய, உலகளவில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளையே பயன்படுத்தவும். இதன்மூலம், உங்களின் ரெஸ்யூம் reader friendly என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம், உங்களின் பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் அனுபவங்களை குறிப்பிட தவறவே கூடாது.

இதை செய்யாதீர்கள்

உங்கள் ரெஸ்யூமில், Reference பற்றி குறிப்பிடாதீர்கள். நீங்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பை பெற்றவுடன், அவர்களை, எதிர்கால தகவல் தொடர்புக்கு வைத்துக்கொள்ள முடியும். அதேசமயம், தேவைப்பட்டால், ரெபரன்ஸ் விபரம் அனுப்பப்படும் என்பதை ரெஸ்யூமில் இடம் இருந்தால் குறிப்பிடலாம். மேலும், ரெபரன்ஸ் நபர்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.

இன்றைய நிலையில், பணி வழங்குநர்கள், நீங்கள் குறிப்பிட்ட ரெபரன்ஸ் நபர்களை மட்டுமே தொடர்பு கொள்வதில்லை. உங்களின் பழைய நிறுவனங்கள் மற்றும் நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனங்களைக்கூட தொடர்பு கொள்கிறார்கள்.

எழுத்துப் பிழை

ரெஸ்யூம் தயாரான பிறகு, அதை எழுத்துப் பிழை சரிபார்க்க, கணினியின் உதவியை நாடுவது பலரின் வழக்கமான உள்ளது. ஆனால், அதை மட்டுமே முழுமையாக நம்புவது தவறு. ஏனெனில், பல கணினி அமைப்புகளில், அமெரிக்க ஆங்கில நடைமுறைதான் உள்ளது. நமக்கு அதிகம் தெரிந்தது பிரிட்டன் ஆங்கிலம். நமக்கு வேலை தரும் இந்திய நிறுவன அதிகாரிகளுக்கும் அப்படித்தான். அதேநேரத்தில், கணினியும் சில காரணங்களால், சில தவறுகளை சுட்டிக் காட்டாமல் விட்டுவிட வாய்ப்புண்டு.

எனவே, உங்கள் ரெஸ்யூமை hard copy எடுத்து, அதை ஒரு எழுத்து விடாமல், ஒரு வரி விடாமல் நீங்களே கவனமாக படிக்கவும். இதன்மூலம், எந்தவொரு தவறையும் எளிதாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில், மனித மூளையைவிட, வலிமையான கணினி என்று இந்த உலகில் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் இருக்க முடியாது. எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு பிடிக்காத விஷயங்கள். உங்களின் ஒட்டுமொத்த மதிப்பையே அது குலைத்துவிடும்.

Saturday, 24 August 2013

இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-

இன்றைய இளைஞர்கள்:
 
இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது. பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன.
இவ்விதமான சமுதாயச் சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை நினைவூட்ட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
திருவள்ளுவர் இளைஞர்களுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக்காட்டிச்சென்றுள்ளார். அவர் காட்டும் வாழ்வியல் நெறிகளைக் கீழ்க்காணும் வகையில் நாம் அறிந்து கொள்வோம்.
1. அன்புடைமை
2. பகுத்தறிதல்
3. வாய்மை
4. குற்றங்கடிதல்
5. வினைத் தூய்மை
6. கள்ளுண்ணாமை
7. வெகுளாமை
1. அன்புடைமை
அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும். இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால் தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. அன்பு வழி வாழ்க்கை வேண்டும். அவ்வழியே வளரும் வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாகும்.
அன்பு உடையவர் பற்றியும், அன்பு இல்லாதவர் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடும் போது,
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு - - - (குறள். 72)
என்று கூறுகின்றார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர் எனவும், அன்பு உடையார் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் எனவும் குறிப்பிடுகிறார். மற்றொரு குறளில் அன்பின் தன்மையை,
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு - - - (குறள். 80)
என்று குறிப்பிடுகிறார்.
உடலில் உயிர்நிலை பெறுவது அன்பின் வழிபட்டதேயாகும். ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவ்வன்புதான். அன்பு இல்லாதவருடைய உடம்பு எலும்பும், தோலும் போர்த்தப்பட்ட உடல் ஆகும். எனவே அன்பைப் பேண வேண்டும் என்பது திருவள்ளுவரின் சீரிய சிந்தனையாகும்.
2. பகுத்தறிதல்
அறிவுச்சிந்தனை இன்று பல நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. பல துறைகளில் நாம் முன்னேறி உள்ளோம். திருவள்ளுவர் இந்த அறிவுச் செல்வத்தைக் கண்டடையும் வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 423)
என்றும்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 355)
என்றும்,
சென்ற இடத்தான் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு - - - (குறள். 422)
எச்சிந்தனைகளானாலும் அச்சிந்தனைகளின் உண்மைப் பொருளை ஆய்ந்து அறிவதுதான் அறிவு. எனினும் வள்ளுவர் 422 ஆம் குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் விடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்று குறிப்பிடுகிறார். கற்றல் மட்டுமே அறிவு அல்ல. நன்மை, தீமைகளையும் அறிவதே அறிவு என்பதைத் திருவள்ளுவரின் சிந்தனையாய்க் கொள்ளலாம்.
3. வாய்மை
"வாய்மை" இன்று மறைந்து போன ஒன்றாகக் காணப்படுகிறது. வாய்மை மனிதனுக்குத் தேவையான பண்பாக இருந்தாலும் கூட அது பல சமயங்களில் பின்பற்றப்படுவதில்லை. வாய்மையின் தன்மையைத் திருவள்ளுவர்,
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் - - - (குறள். 291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் - - - (குறள். 292)
என்கிறார்.
அதாவது "வாய்மை" என்பது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்வதுதான். பொய்யான சொற்களால் நன்மை விளையாது; பொய்யான சொற்களும் குற்றம் தீர்ந்த நன்மையை விளைவிக்குமானால் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம் என்று கூறுகிறார்.
இந்நிலையினைத்தான் வள்ளலார்,
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்
என்று கூறுகின்றார்.
எனவே வாய்மையை மனித வாழ்வினில் கடைப்பிடித்தால் அது பலவிதமான நன்மையை உண்டாக்க வல்லதாகும்.
4. குற்றங்கடிதல்
ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்து தற்பெருமை கொள்ளக் கூடாது. அது அறிவுக் கண்ணை மறைக்கக் கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவு தேடிக் கொள்ள நேரும்.
செய்த குற்றம் சிறிதே ஆனாலும், அதைப் பெரிய குற்றமாகக் கருதி மனம் வருந்துவது சான்றோர் பண்பு. குற்றம் வராமல் காக்கும் ஆற்றல் வளரும். குற்றம் வராமல் காத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தீங்கு நேராது.
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் - - - (குறள். 433)
5. வினைத்தூய்மை
செய்கின்ற அல்லது செய்யப் போகின்ற செயல் புகழையும் நன்மையையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு துன்பப்படுவதாக இருந்தாலும் தெளிந்த அறிவுடையவர்கள் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. எனவேதான் அவர்,
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை - - - (குறள். 656)
என்கிறார்.
அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார். எனவே வினைதனை மேற்கொள்வோர் இக்குறளினை நினைவில் கொள்ளுதல் நலம் பயக்கும்.
6. கள்ளுண்ணாமை
இன்றைய காலகட்டத்தில் கள் என்ற போதைப் பொருள் நவநாகரீகமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. வள்ளுவர் கள்ளுண்பவர்களின் நிலையைக் கீழ்க்கண்ட வகைகளில் குறிப்பிடுகின்றார்.
1. மதிப்பை இழந்து விடுவார்கள்.
2. பகைவரும் அஞ்சமாட்டார்கள்.
3. சான்றோரின் உறவும் போய்விடும்.
4. மற்றவர்கள் முன்பு குற்றவாளியாக நிற்க நேரிடும்.
மேலும் அவர்,
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி - - - (குறள். 923)
என்ற குறளில் பெற்ற தாயின் முன்பாக மகன் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும். அதனால் அந்த மகனைத் தாய் வெறுத்து ஒதுக்குவாள். அப்படியானால் தாயே வெறுத்து ஒதுக்கும்போது மற்ற சான்றோர்கள் அவனை எப்படி சகித்துக் கொள்வார்கள் எனக் கேட்கிறார். ஆகவே கள்ளுண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.
7. வெகுளாமை
வலியார் மேல்சினம் பிறப்பது உண்டு; ஆனால் அப்போது அது பலிக்காது. மெலியார் மேல்சினம் பிறந்தால் அது அவர்களை வருத்தும்.
சினம் பலிக்காத வலியார் இடத்தில் மட்டும் சினம் கொள்ளாமல் காத்துக் கொள்வது போதாது. அங்கே சினம் காப்பதும் காவாமையும் ஒன்றுதான். சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்வோனே சினம் காப்பவன். இது அருளுடையார் செயல் என்பார் திருவள்ளுவர்.
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்விடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்? - - - (குறள். 301)
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற - - - (குறள். 302)
சினத்தை விடப் பெரிய பகை வேறு இல்லை. படையிடமிருந்து ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கத் தவறினால் சினம் தன்னையே கொன்றுவிடும். ஆகவேதான் சினம் யாரிடம் உள்ளதோ அவர்களையே அழித்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. சினங்கொள்ளாமல் வாழ வழி வகுப்போம்.
எனவே இன்றைய இளைஞர்கள் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளைத் தம்முடைய வாழ்வில் பின்பற்றினால் அவர்கள் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

'' அம்மா என்றால் அன்பு ''


மாதங்கள் பத்து சுமந்து
உன் கற்பனைகளால்
என்னை செதுக்கிய சிற்பியானாய்...

கருவில் என் பசி தீர்க்க

திகட்டும் பொழுதும்
உணவை உண்டு
என் உயிர் காத்தாய்...

பிறந்தவுடன்

மொழியில்லா என் ஆசைகளை
சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு
நிறைவேற்றி வைத்தாய்...

விரைவில் நான்

நடை பழக
உன் ஐவிரல் கொண்டு
என் ஒரு விரல் கோர்த்து
பல மைல்கள்
நீயும் நடந்திருப்பாய்...

தலை முடியில்
விரல் வருடி
வலக்கை நீட்டி
என் தலையணை ஆக்கி
வலிகள் தாங்கி
நான் தூங்க விழித்திருப்பாய்...

எனக்கு பசிக்கும் முன்னே

நீ அறிவதால்
பசியை நானோ அறிந்ததில்லை...

குளநீரை கல்லெறிந்து

கலைப்பது போல்
என் தோல்விகளில்
உன் குரல் எறிந்து
என் சோகங்கள்
கலைத்து நிற்ப்பாய்...

எடைதட்டில் உனை அமர்த்தி

உனக்கு சமம் பார்க்க
இவ்வுலகில் ஏதுமில்லை...

இங்கு

உன்னைப்போல்
எந்த தெய்வமும் இல்லை....

~*~கவிதைகள்~*~

~*~கவிதைகள்~*~

ஈகை

 
உண்ணாமல் ஒளித்து வைத்து  
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை  

என்றைக்கும் இனிதே ஈவாய்!!!


கனியும் காலம்

 
சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை
கண்கவரும் சிலையாய் நிற்கும்!
பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான்

நகையாகிப் பொன்னாய் மின்னும்! 
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில்
பொறுமையெனும் பெற்றி தன்னை!
கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட 

நீராகி கனியும் காலம்...

ஹைக்கூக்கள்

                                  நட்சத்திரம்

                             யார்சூட மலர்ந்திருக்கின்றன
                            விண்வெளித் தோட்டத்தில்
                             நட்சத்திரப் பூக்கள்

படைப்பு!

மேகக் கவிஞன்
மழையெனும் மையால்
எழுதிய கவிதைக்கு
இயற்கை இட்ட பெயர்....
பசுமை!'

அடடே!

தொகுதி
மறு சீரமைப்பு...
மருமகளுக்கு
மணி மகுடம்!
மாமியாருக்கு
முதியோர் இல்லம்.

இந்தியாவின் ஏழ்மை

சிக்னல்களில் நிற்கும்
வெளிநாட்டுக் கார்களின்
கண்ணாடிக் கதவு தட்டி
இந்திய ஏழைகள் விற்கிறார்கள்
காகித தேசியக் கொடி

நிலநடுக்கம்

விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்குமாடி வீடுகள்!
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு!

பட்டுப்புழு

பட்டுப்புடவையில்
வண்ணத்துப்பூச்சி
ஓவியமாக அழுதபடி...

அழையா விருந்தாளி

கையசைத்து
கூப்பிட
மரங்கள் இல்லாததால்
வராமல் போனது
மழை!

சூரியன்

அழகாய் பிறக்கிறான் அமைதியாக மடிகிறான்
நடுவில் அப்படியொரு ஆர்ப்பாட்டமா?
சூரியன்.

கலங்கரை விளக்கு

விடிய விடிய விழித்திருந்து
நிலவுலகிற்கு வழிகாட்டும் மௌனம்
கலங்கரை விளக்கம்

தென்றல்

உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்

அக அழகு

தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்

 நன்றி கடன்

அடுத்த பிறவியில்  
எனக்கு மகளாக 
என் தாய்...

வானவில்

                               பறவைகளைத்
                               தீண்டுவதில்லை
                               வான"வில்"
                               ஆயுதம்...

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

குறள் :

1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி
தாக்காதே தகவல் தரும்.
 

பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.

2:
காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும்
நாணாதே மெல்ல நகும்.

பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.

3:
இனிதே மொழி இயம்பினும் நெடண்மை
மெலிதே கொல்லும் செவி.

இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை
மெலிதே கொல்லும் செவி.

பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?

4:
அன்புசால் மொழியே ஆயினு மோட்டலில்
இன்மை யதுகைபேசி உரை.

அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில்
இன்மை அது கைபேசி உரை.

பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான், கேட்டைத் தான் விளைவிக்கும்.

5:
தெவிட்டு மொலி தீதே; கைபேசியுரை
செவிட்டுக் குவழி செயின்.

தெவிட்டும் ஒலி தீதே கைபேசி உரை
செவிட்டுக்கு வழி செயின்.

பொருளுரை: கைபேசியால் வரும் அதீத ஒலி காதைச் செவிடாக்கும் வகையில்; தெவிட்டும் அளவில் கொள்ளுதல் காதுக்குச் செவிட்டை மாத்திரம் அல்ல உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். அளவிற்கு மீறிய அமிர்தமும் நஞ்சுதானே.

6:
வாட்டும் வருத்தம் வகையறியான்; நலந்தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?

வாட்டும் வருத்தம் வகை அறியான்; நலம் தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?

பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை, காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினம்தான் நலம் தருமோ? கைபேசியும், அவன் பாலுள்ள நலமும் தான் கெடும்.

7:
இறையில்லத் துவிசை நிறுத்தாக் கைபேசி
நிறையல்ல; வசைமிகுக்குங் குறை.

இறை இல்லத்து விசை நிறுத்தாக் கைபேசி
நிறை அல்ல; வசை மிகுக்கும் குறை.

பொருளுரை: இறை இல்லமாகிய தேவால
த்தில்; கோயிலில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து கொடுக்கும் மிகக் குறைபாடான செயல் ஆகும்.

8:
சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகையல்ல மேன்மைக் கிழுக்கு.

சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.

பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்திரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைஞ்சலாக அமைந்துவிடும்.

9:
சங்கத்தே சமனித்துச் சாற்றாதே கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?

சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?

பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு. இரைந்து கத்துதல் அல்ல என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு காட்டுக் கத்தாய் கத்திப் பேசுவதா நாகரீகம்?

10:
சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்குமல்ல பிற.

சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்கும் அல்ல பிற.

பொருளுரை: சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியால் அனைவருக்கும் கூப்பிட்டுப் பரப்புதல் அவர்களின் நிந்தையையே நல்கும்; வேறல்ல. பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை.

கும்மிப்பாடல்களின் அமைப்பு:-

கும்மிப்பாடல்களின் அமைப்பு:-

                ஆதிமனிதன் என்று தோன்றி, அறிவுநிலையில் விளக்கம் பெற்றானோ அன்றே அவனுக்குள் கலை ஆர்வம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். கருத்தை உடனே வெளிப்படுத்த உதவும் ஆடலும் பாடலும் அவனுடைய தொடக்கக்காலக் கலைகளாக அமைந்திருக்க வேண்டும். பாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது. பாடலுக்கேற்ப ஆடும் ஆட்டம் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மொழி வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னே தன் உணர்ச்சிப் பெருக்கை ஒலி வடிவங்களாக்கி ஓசையெழுப்பியிருப்பான். அதுவே காலப்போக்கில் வாய்மொழிப்பாடலான நாட்டுப் புறக்கலையாக உருவாகியுள்ளது எனலாம். மொழிச் சிந்தனை எதுவும் இன்றி உணர்ச்சிக் கோலமாக எழுந்த ஒலியமைப்புடைய பாடல்களே நாட்டுப்புறப் பாடல்களின் முதல்நிலை என்று கூறலாம். இவ்வகையான நாட்டுப்புறப் பாடல்களுக்கு மக்களின் மனதைக் கவரும் நயமான தன்மைகள் இயல்பாக அமைந்திருந்தன.
                தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி, பிசி எனும் பாடல் வகைகள் நாட்டுப்புற மக்களின் வாய்மொழிப் பாடல்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.....என்பர் ஆய்வாளர். பாணர்கள் போர்க்களத்திலும், காதற்களத்திலும் பாடியுள்ள குறிப்புகள் ஏட்டிலக்கியத்தில் காணப்படுகின்றன. போர்ப் பாடல்கள் வீரவுணர்வு மிக்கப் புறப்பாடல்களாகவும், காதற் பாடல்கள் இன்பவுணர்வு கொண்ட அகப் பாடல்களாகவும் தான் இருக்கவேண்டும். இவை இரண்டும் மனிதனின் இயல்பான, உணர்வுகள். இவற்றையே பானர்கள் தங்கள் வாய் மொழிப் பாடல்களில் பாடியிருப்பர். அவற்றைத்தானே புலவர்களும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடியுள்ளனர். ஏட்டிலக்கியமான சங்கப்பனுவலுக்கு வாய்மொழிப் பாட்டிலக்கியமான பாணர் பாடல்கள் வழிவகுத்துள்ளன என்று கருதுவது பொருத்தமாகும் எழுத்திலக்கியத்தின் நாற்றாங்காலாக வாய்மொழிப் பாடல்கள் அமைகின்றன
 
சிலப்பில் வாய்மொழிப் பாடல் அமைப்புகள்:
                சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுச்சிறந்துள்ள கானல்வரி, வேட்டுவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக் குரவை, வள்ளைப்பாட்டு, கந்துவரி, முதலியவை வாய் மொழிப்பாடல் அமைப்பை உடையவை. திருவாசகத்தில் வரும் திருப்பொற்சுண்ணம், தெள்ளேணம் கொட்டமோ, திருப்பூவல்லி, திருப்பொன்னூசல் யாவும் வாய்மொழிப்பாடல்களாகப் பாடப்பட்டவை. இடைக்காலத்தில் எழுந்த சிற்றியக்கியங்களான பள்ளு, குறவஞ்சி போன்றவையும் வாய்மொழிப் பாடல் அமைப்புக்கொண்டவை. நாட்டுப்புறப்பாடல்கள் உணர்ச்சிகளை அப்படியே வெளியிட்டு விடுகின்றன. என்றும், நாட்டுப்புறப்பாடல்கள் காலங்கடந்தும் வாழ்வதற்குக் காரணம் மக்கள் நெஞ்சங்களில் பசுமரத்தாணி போல் பதியும் தன்மை அவற்றிற்கு இருப்பதனால் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். பழைய பண்பாட்டின் கருவூலமாய் நாட்டுப் புறப்பாடல்கள் துலங்கும் தன்மையுடையவை.
 
கும்மிப்பாடல்கள்:
                கும்மிப்பாடல்களும் வாய்மொழியாக இருந்து இலக்கிய உருவங்களாக வளர்ந்தவை. தமிழில் அத்தகைய இலக்கிய பண்புகள் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன. கும்மிப்பாடலைப்பு பாரதி போன்ற பலருக்குப் பாடல்கள் புனைய உதவியுள்ளது. பெண்களுக்குரிய இக்கும்மிப்பாட்டு வகையால் சமுதாயச் சீர் திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்பதைத் தெளிவாக உணர்த்தியவர் பாரதியார். பாமர மக்களின் அறியாமையைப் போக்கவும், சமுதாய விழிப்புணர்வை (Social awareness) அளிக்கவும் கும்மிவகைப் பாடல்கள் துணைநின்றன. இத்தகைய பயன்பாட்டு வகைகைச் சார்ந்த மகளிர்கலையாக வளர்ந்துவரும் கும்மிப்பாடல்களின் அமைப்பு முறையே விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
 
கும்மிப்பாட்டின் அமைப்புமுறை:
                ஏதாவது ஒரு இலக்கியப் படைப்பைக் குறிப்பிடத்தக்க ஒரு இலக்கிய இனமாகக் கருத வேண்டுமானால், அதெற்கெனச் சில அமைப்பு முறைகளும் தனித்துவக் கூறுகளும் இருக்கவேண்டும் என்பர் ஆய்வாளர். கும்மிப்பாடல்கள் தனக்கென சில அமைப்பு முறைகளையும் கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன.
"கும்மியடிப் பெண்கள் கும்மியடி - உங்கள்
கூந்தல் குலுங்கிடக் கும்மியடி
நம்மையாளும் விக்கி னேசுவரன் பாதத்தை
நாடிக் கும்மி யடியுங்கடி - நீங்கள்
கூடிக் கும்மி யடியுங்கடி"
இப்பாடலில் பெண்களைப் பார்த்து கும்மியடி பெண்கள் என்று வேண்டுவதைக் காணலாம். அடுத்து இப்பாட்டால் தெய்வ வணக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதைத் காணமுடிகின்றது. கும்மிப்பாட்டின் ஆசிரியர் பாடுவது கும்மிப்பாட்டு என்பதை உறுதியாக வெளிப்படுத்திவிடுகின்றனர். இது கும்மிப்பாடல்கள் கொண்ட அமைப்பாகும்.
 
சமுதாயச் சீர்திருத்தங்களைக் கும்மிப்பாடல் மூலம் எடுத்துரைத்தல்:
                "கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
                குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
                நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
                நன்மை கண்டோ மென்று கும்மியடி
                ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
                றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்
                வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
                விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
                பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
                பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்.
                எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
                இளைப்பில்லை காணென்று கும்மியடி" (பாரதியார் பாடல்கள் ப.211)
என்ற பாரதியாரின் கும்மிப்பாடல்கள் சமுதாயச் சீர்திருத்தத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு கும்மிப்பாடல்களாக அமைவதைக் காணலாம்.
 
கதை சொல்லும் அமைப்பில் கும்மிப்பாடல்:
                வரலாற்றுச் செய்தியைக் கும்மிக்கேற்ற ஓசை நயத்துடன் கதையாகப் பாடிக்கொண்டே கும்மியடிக்கும் பழக்கம் உண்டு என்பதைச் சிவகங்கைச் சரித்திரக் கும்மியால் அறிய முடிகின்றது.
"இப்படியாக மருதிருவரும் கும்பினைக் கேற்ற
பிள்ளையா யரசாண் டிருந்தார்
அப்படியாக இருக்கையிலே மன்னர்க்
கழிவ வந்தகைச் சொல்லுகிறேன்" (சிவகங்கைச் சரித்திரக்கும்மி, பதி.தி. சந்திரசேகரன் ப.48)
மக்களுடைய பேச்சுமொழியில் எழுதப்பட்ட வாய்மொழி இலக்கியத் தன்மையுடன் அமைவதைக் காணலாம்.
 
அறிவுரை கூறுவதாக அமையும் கும்மிப்பாடல்கள்:
                மக்களை நோக்கி அறிவுரை கூறுவதாக அமையும் கும்மிப்பாடல்கள் சமுதாயத்தில் பண்பாட்டு முன்னேற்ற நோக்கம் கொண்டவை எனலாம்.
"மாதர் நடக்கையைச் சொன்னது மல்லாமல்
வந்திடுந் தீங்கையும் நன்குரைத்தேன்
பாதகி யாசையை நீக்கிச் சிவஸ்துதி
பண்ணுவா யெப்போதும் மானிடனே... (விலைமாதர் கும்மி - பாடல் 44)
விலைமாதர் ஒழிப்பு அவசியம் என்று உரைப்பதைக்காணலாம்
"கற்புள்ள மாதர் குலம் வாழ்க - நிறை
கற்பை யறிந்தவரே வாழ்க
தற்பரனைப் போற்றிக் கும்மியடி - குரு
சிற்பரனைப் போற்றிக் கும்மியடி" (வாலைக் கும்மி - பாடல் 45)
என்ற கும்மிப்பாடல் கற்புள்ள மாதரைப் போற்றுவதாக அமைந்துள்ளது.
 
சந்தவோசையுடைய கும்மிப்பாடல்:
                சந்தவோசை மிக்க கும்மிப் பாடல்கள் மக்களை எளிதில் கவரும் ஆற்றல் உடையவை. வள்ளிவேடனைப் பார்த்துக் கூறுவதாக அமையும்.
"எட்டாத தேனுக் கொரு நொண்டி பண்ணாந்து
கொட்டாவி விட்ட கதைபோல
ஏங்கிக் கணைதாங்கிப் பனைவாங்கி மிகவோங்கி
எதிரென் முன்னே நில்லாதே வேடுவனே" (முருகர் ஒயிற்கும்மி. பாடல் 136)
இப்பாடல் கேட்போரை மகிழச் செய்வதாகும்.
   
வருணனை மிக்க கும்மிப்பாடல்:
                பாண்டவர் வல்லியாற்றுக் கரையைக் கடந்து தெய்வ மலையைக் கண்ணாரக் கண்டார்கள் என்ற செய்தியைச் சொல்ல வந்த ஆசிரியர் அம்மலையையும், மலைசூழ்ந்த சோலையையும் மிக்க நயத்துடன் வருணனை செய்துள்ளார்.
"மாங்கனி தேங்கனி காய்ந்திருக்கு மங்கே
மாதளை மல்லிகை பூத்திருக்கும்
தாங்காத வாழைக் குலைசாயு மங்கே
தாழைமலர் வாசமே பாயும்" (பஞ்சபாண்டவர் வைகுந்தக்கும்மி பாடல் 227)
இவ்வருணனைப் பகுதி கும்மிப்பாடலுக்கு இலக்கிய இன்பத்தைக் கொடுத்து நிற்பதைக் காணலாம்.
 
முடிவுரை:
                கும்மியைத் தமிழருக்கே உரிய கலையாகக் கூற முடியவில்லை. ஆந்திராவிலுள்ள கொப்பியும் கேரளாவிலுள்ள கை கொட்டிக்களி, பிராமணிப்பாட்டு ஆகியவை கும்மிப் பாடலுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளன. கன்னட நாட்டிலும் கும்மியைப் போன்று ஒரு ஆடல் நடைபெறுகின்றது. ஆகையினால் கும்மிப்பாட்டை ஒரு திராவிடக் கலை என்று கூறுவதே பொருத்தமாகும். குஜராத் நாட்டில் உள்ள கர்பா நடனமும் ராஜஸ்தானில் நடக்கும் கும்மார ஆட்டமும் கும்மியுடன் தொடர்பு கொண்டதாகத் தோன்றுகின்றன.
                பெண்கள் கலையாக வளர்ந்து வரும் கும்மிப் பாடல்கள் தனக்கென்று சில கூறுகளை அமைத்துக் கொண்டு வளர்ந்து வந்திருப்பதை அறிய முடிகின்றது. கணினி உலகில் வாழும் இக்காலக் கட்டத்திலும் கிராமங்களில் காணும் பொங்கலன்று பெண்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு பொது இடத்தில் கூடி பல்வகைபாடு பொருளுடன் கூடிய கும்மிப் பாடல்களைப் பாடி கும்மியடிப்பது கண்ணுக்கும், கருத்துக்கும் இன்பம் விளைவிப்பதாகும்.